முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே 5 ஆழ்துளை கிணறு அமைக்க திட்டம்: கிராம மக்கள் எதிர்ப்பை தடுக்க போலீஸார் குவிப்பு

திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் இருந்து ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டதின் மூலம் கள்ளக்குறிச்சி - சின்ன சேலம் பகுதிகளுகு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது. இதற்காக சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் இருந்து ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டதின் மூலம் கள்ளக்குறிச்சி - சின்ன சேலம் பகுதிகளுகு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது. இதற்காக சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டது.

கிணறுகளில் சமீபகாலமாக தண்ணீர் வற்றி போனதால் மேலும் கூடுதலா 5 க்கும் மேற்பட இடங்களில் ஆள் துளை கிணறு அமைக்க பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு முடிவெடுத்தது. 

இதையடுத்து விவசாய கினறுகளில் தண்ணீர் வற்றி விடுவதால் விவாயம் பாதிக்கப்படுகிறது. குடி நீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கால் நடைகளுக்கு தண்ணீர் இல்லை என்றும் சுந்தரேசபுரம் கிராம மக்களும் அதன் சுற்று வட்டார கிராம மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவகத்தில் நடந்த 2 கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இன்று மாவட்ட கண்காணிப்பளர் மனோகரன் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட 400க்கும் மேற்பட்ட போலீஸார் சுந்தரேசபுரம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட்டம் ஏதும் நடக்காமல் தடுக்க தண்ணீர் பீச்சு வாகனம் தீ அணைப்பு வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் முன்னெச்சரிக்கையாக தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →