பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து : பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசுப் பேருந்து நடத்துநர் மீது கத்திக் கத்து சம்பவம் காரணமாக, அரசுப் பேருந்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பேருந்து நடத்துநர் மீது கத்திக் கத்து சம்பவம் காரணமாக, அரசுப் பேருந்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை மதியம் ஒன்றேகால் மணியில் இருந்து 3 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
உடனடியாக, துணை சபாநாயகர் ஜெயராமன், பொள்ளாச்சி எம்எல்ஏ முத்துக்கருப்பண்ணசாமி விரைந்து வந்து குற்றவாளி மீது நடவடிக்க எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாயினர்.