விருதுநகர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் இதுவரையில் பதவி வகித்து வந்த உள்ளாட்சி பொறுப்புகள் அனைத்தையும் ஆட்சியர் முன்னிலையில் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
இந்த வாரத்திற்குள் மக்களவை தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நேர்காணலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 24-ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டது. அதில், விருதுநகர் மக்களவை தொகுதி அதிமுகவின் வேட்பாளராக ராதாகிருஷ்ணன அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மக்களவை தேர்தலுக்கான பணிகளையும் உடனே தொடங்கும் படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் இதற்கு முன்பு அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். அதோடு, தற்போது மாவட்ட துணைச் செயலாளராகவும், சிவகாசி ஊராட்சி ஒன்றியச் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் நேரில் சென்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாவட்ட, வட்டார நிர்வாகிகளை சந்தித்து அறிமுகமாகி கட்சிக்காரர்களுடன் இணைந்து ஆதாரவை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால், அதற்கு முன்னதாக அரசு பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை ஆகும்.
அதன் அடிப்படையில் அவர் வகித்து வந்த பதவிகளான சிவகாசி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு வட்டார ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர், சிவகாசி தொழில் பேட்டை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகஸ்தர்-தலைவர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் தனது ஆதாரவாளர்களுடன் இப்பதவிகள் அனைத்தையும் ராஜிநாமா செய்வதாக கூறி கடிதத்தை ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்ததை அடுத்து அவர் பெற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.