அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஒன்பது பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிப்பதாக,குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது
சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ஒன்பது பேர் மீது அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கண்மாய் பகுதியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசுகள் தயாரிப்பதாக,குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து பாண்டி கொடுத்த தகவலின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் சிறுகுளம் கண்மாய் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.
சோதனையில் அதேபகுதியை சேர்ந்த பாலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் பேன்சிரக பட்டாசுகள் அனுமதியின்றி தயாரிக்கபட்டது தெரியவந்தது.இதையடுத்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் படந்தால் சேர்ந்த ஜான்சன்,கே.சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி,பாலு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜான்சனை மட்டும் கைது செய்துள்ளனர்.மேலும் பேன்சிரக பட்டாசுகள்,பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளதாகவும்,அதன் மதிப்பு இரண்டு லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement