ஜெயங்கொண்டான் பகுதியில் உண்ணாவிரதம் இருந்த 17 விவசாயிகள் இன்று கைது
ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையையாளரிடம் இருந்து 8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஜெயங்கொண்டான் பகுதியில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்துக்கு 11ஆயிரத்து 489 நில உரிமையையாளரிடம் இருந்து 8 ஆயிரத்து 136 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தை உடனே செயல்படுத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை மீண்டும் விவசயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி 23 கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாகும்வரை உண்ணா விரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று டி.எஸ்பி வின்செண்ட் ஜெயராஜ் தாசில்தார் வட்டாட்சியர் முகுந்தனன் ஆகியோர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அறிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை உண்ணாவிரதத்தில் இருந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.