தி.மு.க. கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதி: ஏணி சின்னத்தில் போட்டி
மக்களவை தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் பட்டியல்
மக்களவை தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர் பட்டியல் தயாராகிவருகிறது.
இந்நிலையில் இன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரை சாமி, கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இன்று காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகித்து இந்த கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறது.
பேச்சுவார்த்தையின் போது எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் ஒரு தொகுதி ஒதுக்குவதாக உறுதி அளித்தனர். இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் ஏற்றுக் கொண்டோம்.
மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி வேலூர், மத்திய சென்னை, உள்ளிட்ட தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம்.இதில் எந்த தொகுதி என்பதை இன்று இரவு 7 மணிக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
கடந்த முறை நாங்கள் தி.மு.கவின் உதய சூரியன். சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த சின்னத்தில் போட்டியிடுவோம். என்றார்