முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் 1000மீட்டர் உயரம் வரை ஆளின்றி பறக்கும் பேன்தம் கேமரா இயக்கம்

பழங்காலங்களில் பெரிய கேமராக்களில் பெரிய கேசட் போட்டு படம் எடுத்த காலம் படிப்படியாக சிறிய கேசட், ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு என மாறி கையடக்க கேமராவாக மாறிவிட்டது.  இந்நிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

பழனியில் 1000மீட்டர் உயரம் வரை ஆளின்றி பறக்கும் பேன்தம் கேமரா இயக்கப்பட்டது.

பழங்காலங்களில் பெரிய கேமராக்களில் பெரிய கேசட் போட்டு படம் எடுத்த காலம் படிப்படியாக சிறிய கேசட், ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு என மாறி கையடக்க கேமராவாக மாறிவிட்டது.  இந்நிலையில் ஆட்கள் இன்றி பறக்கும் கேமராக்கள் உதவியுடன் பிரமாண்டமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.  சிங்கம்-2, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம் என்ற பல திரைப்படங்கள் இதுபோன்ற கேமராக்களால் எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கேமராக்கள் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி தற்போது முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும், மதுரையில் கிரானைட் குவாரிகளை அளவு எடுக்க உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை நேதாஜிரோடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் பேன்தம்-2 கோ ப்ரோ 4கே என்ற ஹெலிகாப்டர் கேமராவை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக வாங்கியுள்ளனர்.  சுமார் நான்கு இலட்சம் மதிப்புள்ள இக்கேமராவில் புரொப்பெல்லர்கள், எல்இடி விளக்குகள், மோட்டார், திசைகாட்டும் கருவி மற்றும் கேமரா உள்ளது.  இதை இயக்க தனியே மானிட்டர், ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட ஜாய் ஸ்டிக் இவை உள்ளன.  இவற்றின் மூலம் கேமராவை சுமார் ஆயிரம் அடி உயரம் வரையும், பல கி.மீ தூரமும் கேமராவை ஆளின்றி இயக்க முடியும். 

வாட்டர் புரூப் கேமராவான இது மழை காலங்களிலும் இயக்கலாம்.  சென்னை போன்ற பெருநகரங்களில் திரைப்படங்கள் எடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த கேமரா தற்போது சாதாரண திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.  இதன் மூலம் திருமணம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்களை புதுவித கோணங்களில் எடுத்து விசேஷ வீட்டாருக்கு வழங்க முடியும் என இதன் உரிமையாளர் தினகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.