தற்போதைய செய்திகள்

தொண்டு நிறுவனத்திடமிருந்து இலவச வேஷ்டி, சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும்படை

திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ளது தனியார் தொண்டு நிறுவனம். கடந்த 8.3.24-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் துவக்க நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழைகளுக்கு இலவச

குமாரபாண்டியன்

திருச்செந்தூரில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த இலவச வேஷ்டி, சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ளது தனியார் தொண்டு நிறுவனம். கடந்த 8.3.24-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனம் துவக்க நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்குவது வழக்கமாம். இதே போல சனிக்கிழமையன்று காலையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சம்பவம் பற்றி தகவலறிந்த திருச்செந்தூர் வட்டாட்சியர் ப.நல்லசிவன் தலைமையிலான பறக்கும்படை அலுவலர்கள் செல்வபிரசாத், பேச்சிமுத்து, மற்றும் நாகசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து, தொண்டு நிறுவனத்தாரிடம் தேர்தல் விதிமுறைகள் அமலாகி உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது எனக்கூறினர்.

மேலும் அங்கிருந்த 1454 சேலைகள், 203 வேஷ்டிகள் மற்றும் 43 லுங்கிகள் ஆகியவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் அந்த தொண்டு நிறுவனத்திற்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கிட உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT