இடதுசாரி கட்சிகளை தவிர்த்து விட்டு அ.தி.மு.க.வால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது: பிரகாஷ் காரத்
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேலூர் பகுதியை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் தலைவர்
நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேலூர் பகுதியை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் தலைவர் பிரகாஷ் காரத் செய்தியாலர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடும்; தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளை தவிர்த்து விட்டு அ.தி.மு.க.வால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது; ஊழல் காங்கிரஸ் மற்றும் மதவாத பாஜக கட்சிகள் ஆட்சிக்கு வராமல் தடுப்பதே இடதுசாரிகளின் நோக்கம் என்று தெரிவித்தார்.