முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடி பிரதமராகும் சூழல் ஏற்பட்டால் ஆதரிப்பீர்களா? கருணாநிதி பதில்

திமுக தலைவர் கருணாநிதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் மோடி பிரதமராக ஆதரவு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:37 AM
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் மோடி பிரதமராக ஆதரவு கொடுப்பீர்களா என்று  கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்த கேள்வி பதில் விபரம்:

கேள்வி: தேர்தல் முடிவுக்குப் பிறகு, பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

கருணாநிதி: மதசார்பற்ற ஒரு கட்சி இந்தியாவின் ஆளுங்கட்சியாக வருவதைத் தான் நானும் என் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்பும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனிப்பட்ட ஒருவரைக் குறிப்பிட்டு, அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா, மாட்டீர்களா என்றெல்லாம் என்னிடத்தில் பதில் பெறுவது என்பது சரியல்ல.

கேள்வி: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?

கருணாநிதி: எனக்கு தெரிந்தவரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →