தூத்துக்குடியில் மார்ச் 17-ல் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மார்ச் 17-ம் தேதி பிரசாரம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மார்ச் 17-ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.ஜெகனை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மார்ச் 17-ம் தேதி பிரசாரம் செய்கிறார். அன்றையதினம், மாலை 3 மணிக்கு செய்துங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து 3.30 மணிக்கு ஆழ்வார்திருநகரியில் பேசுகிறார்.
பின்னர், மாலை 4 மணிக்கு குரும்பூரிலும், 4.30 மணிக்கு திருச்செந்தூரிலும், 5 மணிக்கு காயல்பட்டினத்திலும், 6 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 6.30 மணிக்கு ஆத்தூரிலும், 7 மணிக்கு ஏரலிலும், 7.30 மணிக்கு சாயர்புரத்திலும், 8 மணிக்கு புதுக்கோட்டையிலும் பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர், இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் செல்வநாயகபுரம் பிரதான சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.