முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆட்சியர், காவல் ஆணையர் அலுவலகங்கள் முற்றுகை

திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட தனியார் வங்கி ஊழியர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:41 AM
பகிர்:

திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட தனியார் வங்கி ஊழியர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்த முத்து மகன் ஆறுமுகம் (38). இவர் எச்.டி.எப்.சி. வங்கியில் கடன் வசூல் பிரிவு மேற்பார்வையாளராக பணி செய்து வந்தார். இதே நிறுவனத்தில் கடன் வசூல் பிரிவில் ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டியராஜன், ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த சுப்புக்குட்டி ஆகியோர் வேலை செய்து வந்தனர்.கடன் வசூல் பணியாளர் சுப்புக்குட்டியின் பணி திருப்தி இல்லாததால், அவர் சில தினங்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டாராம். இதனால் ஆறுமுகம் மீது சுப்புக்குட்டி விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகம் தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்டார். ஆறுமுகத்திற்கு ஜெயசண்முகமஞ்சு என்ற மனைவியும், 2 வயதில் லிசாந்த் என்ற மகனும் உள்ளனர்.

ஆறுமுகத்தின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுமுகத்தின் உறவினர்கள் புதன்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.தமிழ்நாடு விஸ்வகர்ம விடுதலை இயக்கத்தின் தலைவர் ஜி. ராஜ்குமார், செயலர் சரவணன், பொருளாளர் ரவி மற்றும் குறிச்சி, பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். ஆறுமுகத்தின் தாயார், மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

இதை தொடர்ந்து பாளையங்கோட்டையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் ஆறுமுகத்தின் உடலை பெற்று சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →