'அம்மா' என்ற வார்த்தை பொதுவானது என்பதால் பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சொத்துக்களில் கட்சி சின்னங்கள் இருப்பதை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சொத்துக்களில் கட்சி சின்னங்கள் இருப்பதை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளித்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண் குமாருக்கு அனுப்பியுள்ள கடிதம் பற்றி குறிப்பிட்டது.
அதில் எம்.ஜி.ஆர்., நினைவிடம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதால் அதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அம்மா உணவகங்களில் பொறிக்கப்பட்டுள்ள முதல்வரின் படம், இரட்டை இலை சின்னங்களை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் அம்மா என்பது பொதுவாக சொல்லாக இருப்பதால் அதற்கு தடையில்லை. அது குறித்து பின்னர் ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும். சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ளவை இரட்டை இலை சின்னம் போலத் தான் இருக்கிறது. அவை மறைக்கப்பட வேண்டும். தண்ணீர் பாட்டில்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட வேண்டும். என்று அறிவுறுத்தியுள்ளது.