ஐகா வாங்கிய தங்கபாலு: 39 தொகுதியிலும் கட்சியை பலப்படுத்த பிரசாரம் செய்கிறாராம்
வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தங்காபாலு அறிவித்துள்ளார். மேலும் 39 தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை
வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்முன்னாள் தலைவர் கே.வி. தங்காபாலு அறிவித்துள்ளார். மேலும் 39 தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கபாலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகள விருப்ப விண்ணப்ப மனுவினை சேலம் உள்ளிட்ட எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டுமென்று நான் விண்ணப்ப மனு அளிக்கவில்லை.
சேலத்தைச் சேர்ந்த 3 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆகியயோர் என்னுடைய வேண்டுகோளை ஏற்காமல் தாங்களாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தேர்தல் விருப்ப மனு அளித்தார்கள்.
கடந்த 6 மாதத்திற்கு முன்னரும் 2011 சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தார்மீக பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். காங்கிரசில் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் வரும் சட்டமன்ற நாடாளுமன்றம் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிடுவது இல்லை என்றும் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறேன்.
தேர்வு குழு தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் போன்றோரிடம் மீண்டும் எனது நிலைப்பாட்டை நேரில் சென்று தெரிவித்து உள்ளேன். தொடர்ந்து ஒருவரே தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக புதியவர்கள், தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.
அவர்களே வேட்பாளர்களாக அந்தந்த தொகுதியில் நியமனம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்து உள்ளேன். தலைமை தேர்வு செய்யும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வேன். இவ்வாறு தங்கபாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தங்கபாலுவும் அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.