முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழியில் வாகன சோதனையில் ரூ.15லட்சம் பறிமுதல்

சீர்காழி கோவிலான் தெருவில் தேர்தல் பறக்கும் படையினை சேர்ந்த தலமையிடத்து துணை வட்டாசியர் எஸ்.சபிதாதேவி,காவல் உதவி ஆய்வாளர் கே.ரவி மற்றும் போலீஸார் வாகன

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

சீர்காழியில் தேர்தல் பறக்கும்படையினரின் வாகனசேதனையில் நிலம் பத்திரபதிவிற்கு காரில் கொண்டு சென்ற ரூ.15 லட்சம் பணம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சீர்காழி கோவிலான் தெருவில் தேர்தல் பறக்கும் படையினை சேர்ந்த தலமையிடத்து துணை வட்டாசியர் எஸ்.சபிதாதேவி,காவல் உதவி ஆய்வாளர் கே.ரவி மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சீர்காழியிலிருந்து-புதுப்பட்டிணம் சென்ற சிவப்பு நிற போலீரோ காரினை நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையில் காரில் ரூ.15 லட்சம் பணம் இருந்தது.

பணத்திற்குரிய ஆவணங்கள் ஏதும் காரில் வந்தவர்களிடம் இல்லை.இதனால் ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சீர்காழி வட்டாசியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.வட்டாசியர் ஆர்.கலைசெல்வி,மண்டல துணை வட்டாசியர் பிரேமசந்திரன் ஆகியோர் காரில் வந்த சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த வெ.சங்கர்(28),கார் ஓட்டுனர் கார்த்தி ஆகியோரிடம் விசாரித்தபோது,நிலம் பத்திர பதிவு செய்வதற்காக தனியார் வங்கியிலிருந்து பணம் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.