திருச்சி காட்டூர் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி
திருச்சி காட்டூர் அருகே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி காட்டூர் அருகே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை மாவட்டம் கணபதி நகர் நேரு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் 55 லாரி புக்கிங் ஆபிஸ் கிளர்க் அவரது மகன் பாஸ்கர் 31 உதயகுமார் மனைவி பானுமதி 50 ஆகிய மூவரும் மகனுக்கு தோஷம் கழித்து வர ஒரு காரில் திருநாகேஸ்வரம் சென்றனர்.
திருச்சி காட்டூர் மஞ்சள்திடல் பாலம் அருகே வந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார், பாஸ்கர் இருவரும் உயிரிழந்தனர் . திருவெறும்பூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.