முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.55 ஆயிரம் இழப்பீட்டுக்காக அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோப்பநாயக்கனூரை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கண்மணி(40).  இவர் கடந்த 2001ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி தாராபுரத்தில் இருந்து கள்ளிமந்தயத்துக்கு அரசுப் பேருந்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

பழனியில் இழப்பீடு கட்டாத காரணத்தால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோப்பநாயக்கனூரை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி கண்மணி(40).  இவர் கடந்த 2001ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி தாராபுரத்தில் இருந்து கள்ளிமந்தயத்துக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.  கள்ளிமந்தயம் பேருந்து நிறுத்தத்தில் இறங்குமுன் பேருந்து எடுக்கப்பட்டதால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  இதனால் பழனி சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

 கடந்த 2005ம் ஆண்டு ரூ.31 ஆயிரம் மற்றும் வட்டி வழங்க போக்குவரத்து நிர்வாகத்துக்கு உத்திரவு வழங்கப்பட்டது.  ஆனால் பணம் வழங்கப்படாததால் கடந்த 2012ம் ஆண்டு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரம் மற்றும் வட்டியை வழங்காததால் பழனி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்திரவின் பேரில் பழனியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு கோர்ட் முன் நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.