சமத்துவ மக்கள் கட்சியில்,சமத்துவம் போற்றப்படவில்லை. காமராஜர் தேசிய சமத்துவ கட்சித் தலைவர் பேச்சு
நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் சமத்துவம் போற்றப்படவில்லை என்றார் காமராஜர் தேசிய சமத்துவ கட்சியின் தலைவர் எஸ்.கணேசன்.
நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் சமத்துவம் போற்றப்படவில்லை என்றார் காமராஜர் தேசிய சமத்துவ கட்சியின் தலைவர் எஸ்.கணேசன்.
காமராஜர் தேசிய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியின் துவக்க விழா
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற,அக்கட்சியின் தலைவரும், நிறுவனருமான, கட்சியின் கொடி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பின்னர் பேசியது:
சமத்தும் காப்போம்,சரி்த்திரம் படைப்போம்,தேசத்தை காப்போம்,சிலரின் வேஷத்தை கலைப்போம் என்ற கொள்கையுடன் துவங்கப்பட்டுள்ள இக்கட்சியானது தேசிய அளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் சமத்துவம் போற்றப்படவில்லை.ஜாதி அமைப்பாக மட்டுமே செயல்படுகின்றது. பிப் 16-ல் நெல்லையில் நடைபெற்ற மாநாட்டிலும் இந்நிலை மாறவில்லை.அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் இக்கட்சி துவங்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்றார் எஸ்.கணேசன்.
தொடர்ந்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சிகப்பு, மஞ்சள் நிறத்தில் காமராஜரின் உருவம் அச்சிடப்பட்ட கட்சியின் கொடி ஆகியவற்றை எஸ். கணேசன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர்,தமிழகத்தில் மது விலக்கை அமுல்படுத்தவேண்டும், தனியார் வருமானம், சொத்துகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யவேண்டும். இலவசங்கள் வழங்கப்படுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலாளர் எம்.டி.காளிதாஸ்,பொருளர் ஆர்.முத்துக்குமார்,மாநிலத்துணைத் தலைவர் எஸ்.ஜெகநாதன், கொள்கைப்பரப்புச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், விவசாயபிரிவு மாநில செயலாளர் ஏ.சின்னத்துரை,சிறுபாண்மை அணி மாநிலச் செயலாளர் ஆர்.கே.சுலைமான் மற்றும் கட்சித்தொண்டர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
முன்னதாக கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் ஆர்.பிரபு வரவேற்றார், நிறைவில் செம்பனார்கோயில் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி நன்றி கூறினார்.