முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே இலங்கைக்குக் கொண்டுசென்ற 22 சுவாமி சிலைகள் பறிமுதல்

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் போலீஸார், தேர்தல் பறக்கும்படை அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் இருந்து மகாபலிபுரம் வழியாக ஒரு காரில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் போலீஸார், தேர்தல் பறக்கும்படை அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் இருந்து மகாபலிபுரம் வழியாக ஒரு காரில் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர், அம்மன், முருகன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இவை, ஒரு அடி முதல் இரு அடிகள் வரை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று தெரிகிறது. வெண்கலம், பித்தளை இவற்றால் ஆன இந்த சிலைகளை எடுத்துச் சென்றது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.