முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணியில் முரண்பாடோ, குழப்பங்களோ இல்லை: முரளிதர்ராவ்

பாஜக தொகுதி பங்கீடு குறித்து தமிழகத்திற்கான பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதர்ராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

பாஜக தொகுதி பங்கீடு குறித்து தமிழகத்திற்கான பாஜக மேலிடப்பொறுப்பாளர் முரளிதர்ராவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

 தமிழ்நாட்டில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்குள் முரண்பாடோ, குழப்பங்களோ, பகை உணர்வோ இல்லை.கூட்டணியில் பிளவும் இல்லை

  தொகுதி பங்கீட்டில் உள்ள  99.5 சதவீத பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டு விட்டன. சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. அவையும் சுமூகமாக முடியும். பெரும்பாலான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. கூட்டணி கட்சி தலைவர்களின் ஒப்புதல் பெற்று தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.

சில தொகுதிகளில் பா.ம.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதுதான் சில பிரச்சினைகளுக்கு காரணம். இது தொடர்பாகவும் பேசி முடிவு எட்டப்படும்.

தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ராஜ்நாத்சிங் சென்னை வந்து வெளியிடுவார். இன்று கோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் ராஜ்நாத்சிங் சென்னை வரும் தேதி நாளை 18–ந்தேதி)தான் முடிவாகும். என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →