தற்போதைய செய்திகள்

காமராஜ் பொறியியல் கல்லூரியில் டான்செட் தேர்வு

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் தொழில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்  கல்லூரியில் பொது அறிவு நுழைவு தேர்வான டான்செட் தேர்வு வருகிற 22,23 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு விருதுநகர் காமரஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, வெள்ள்ச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரி ஆகிய மையங்களில் குறிப்பிட்ட நாள்களில் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வில் எழுதுவோர் இரண்டு நாள்களும் தேர்வு மையங்களுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு தொடர்பான தகவல்களை காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விசாரணை அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம் என முதல்வர் ஆனந்த ஆச்சாரி தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT