திருச்சியில் தற்கொலை செய்யும் போராட்டம் நடத்திய பாரதீய கிசான் சங்கத்தினர் 15 பேர் கைது
திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோயில் இருந்து இன்று பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்த 15 பேர் தற்கொலை செய்வதாக மிரட்டினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோயில் இருந்து இன்று பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்த 15 பேர் தற்கொலை செய்வதாக மிரட்டினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயத்துக்காக வங்கிகளில் அடகு வைத்த நகைகளை ஏலத்துக்கு விடக்கூடாது, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் டிராக்டர்களை பறிமுதல் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கத்தினர்கள்
மாநில துணைத்தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாநகர போலீஸார் இதற்கு அனுமதி மறுத்த நிலையில் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறிய 15 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.