முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவையில் பஸ்சில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் பஸ்சில் வியாழக்கிழமை இரவு நடத்தியசோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் பஸ்சில் வியாழக்கிழமை இரவு நடத்தியசோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு தனியார் பஸ் வியாழக்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. நீதிமன்றம் அருகே வாகன தணிக்கை நடந்து கொண்டிருந்தது.

தனியார் பஸ்ûஸயும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்யப்பட்டன. இதை கொண்டு சென்ற கடலூர் ஜியாவுதீனை அதிகாரிகள் விசாரித்தனர். அவர் கூறுகையில், வெள்ளியை விலைக்கு வாங்கி நகை வேலைக்காக கொண்டு செல்கிறேன் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் துணை தாசில்தார் விமலன், முரளி, இருதயராஜ் ஆகியோர் , 11 கிலோ வெள்ளியை உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் வீரவல்லவன் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ. 5 லட்சம் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.