தூத்துக்குடியில் ஆம் ஆத்மி தேர்தல் அலுவலகம் திறக்க தடை : மீனவர்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுகிளில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, அங்கு ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் திறக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனை அறிந்து தூத்துக்குடி பகுதி மீனவர்கள், காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.