தற்போதைய செய்திகள்

மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்: 4 மாணவர்கள் கைது

விருதுநகர் அருகே ஏ.டி.பி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாசிலமணி-பாண்டியம்மாள் தம்பதியரின் மகன் அஜீத்(14). சிவகாமிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-வது படித்து வருகிறார். இதே

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மாணவன் தீக்குளி்த்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஏ.டி.பி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாசிலமணி-பாண்டியம்மாள் தம்பதியரின் மகன் அஜீத்(14). சிவகாமிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-வது படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினகரன்(16), மாரியப்பன் மகன் ராஜேஷ்கண்ணா(15), ஜெயராஜ் மகன் நவீன்குமார்(15), பெரியசாமியின் மகன் முனீஸ்வரன்(15). இவர்கள் 4 பேரும் கச்சேரி சாலையில் தனியார் பள்ளியில் 10-வது படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்கள் அஜீத் சிகரெட் பிடித்ததை பார்த்து வீட்டில் சொல்லி விடுவதாக  மிரட்டி உள்ளனர். அதோடு, கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த அஜீத் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஊற்றி தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவனின் வாக்குமூலம் மற்றும் அவனது தந்தை மாசிலமணி கொடுத்த புகார் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT