சிதம்பரம் : வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் காயம்
சிதம்பரம் மாரியப்பா நகர் இரண்டாவது தெற்கு குறுக்குத் தெருவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வம், தனது வீட்டை வாடைகைக்கு
சிதம்பரம் மாரியப்பா நகர் இரண்டாவது தெற்கு குறுக்குத் தெருவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வம், தனது வீட்டை வாடைகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டின் இடது புறம் அறையில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில், ஒருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புப்படையினர் வந்து தீயை அணைத்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராமன் மற்றும் அண்ணாமலை நகரப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
Advertisement
வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருக்கலாம் என்றும், அது எதிர்பாராத விதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.