முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பொறியியில் விண்ணப்பம் விநியோகம்: ஒரே நாளில் 2,600 விற்பனை

திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக் கழக மண்டல அலுவலகம், ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை பி.இ. பொறியியல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. ஒரே நாளில் 2,600 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக் கழக மண்டல அலுவலகம், ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை பி.இ. பொறியியல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. ஒரே நாளில் 2,600 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நிகழாண்டு பொறியியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க அண்ணா பல்கலைக் கழக விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது. பொறியியல் பிரிவில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் தமிழகம் முழுவதும் 59 மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசு, தனியார், பல்கலைக் கழக உறுப்புமை பொறியியல் கல்லூரிகளில் முதலாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் படிவம் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக் கழக மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.

விண்ணப்பம் விநியோகத்தை மண்டல அலுவலக புலமை முதல்வர் முனைவர் டி.வி.எஸ். பிள்ளை தொடங்கி வைத்தார். இயற்பியல்துறைத் தலைவர் முனைவர் எம். குணசேகரன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பழையபேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகத்தை முதல்வர் விஜயாம்பிகா தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மாணவர், மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வாங்கிச் சென்றனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500 க்கும், எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ரூ. 250 க்கும் விண்ணப்பங்கள் விற்கப்படுகிறது.

மே 20 ஆம் தேதி வரை அலுவலக தினங்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மண்டல அலுவலகத்தில் 2,000 க்கும் அதிகமான விண்ணப்பங்களும், ராணி அண்ணா கல்லூரியில் 596 விண்ணப்பங்களும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →