நெல்லை: விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை
திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலியில் தெற்கு புறவழிச்சாலையில்
மோட்டார் சைக்கிள் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (24), சேலம் நியூநகர் பிரதான சாலையை சேர்ந்தவர் நிர்மல் (24) இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
சேலத்தை சேர்ந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்ததாக தெரிவித்தனராம். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஆக்சா பிளைடு, கட்டிங் பிளயர் போன்ற பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சதீஷ், நிர்மல் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனரா அல்லது ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட வந்தனாரா என்ற கோணத்தில் போலீஸார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.