முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனர்.

கோடை வெப்பம் 103 டிகிரியாக உள்ளது. வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்களை தேடி செல்லும் நிலை உருவாகியுள்ளது. குளிர்பானக் கடைகளில் கூட்டம் பெருமளவில் காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அக்னிநட்சத்திரம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

சில தினங்களுக்கு பெய்த மழையில் குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பணிகளின் கூட்டம் அதிகரித்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், கோடை வெப்பம் கடுமையாக இருப்பதாலும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சனிக்கிழமை திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், ராமனாதபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

பாபநாசம் அணைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், அணையில் படகு சவாரி இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு செல்ல தடை நீடித்து வரும் நிலையில் தற்போது நீர்மட்டம் குறைந்த காரணத்தால் படகு சவாரி நிறுத்தப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்ல நேரிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →