முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

விருதுநகர் மாவட்டத்தில் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 1645 விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:40 AM

விருதுநகர் மாவட்டத்தில் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 1645 விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 60 மையங்களில் சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இதில், இம்மாவட்டத்தில் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இரு மையங்களில் வழங்கப்படுகிறது.

இதில், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலையில் 9.30 மணிக்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். காலை முதல் 1 மணி வரையில் 500 விண்ணப்பங்களும், அதற்கு பின் 300 விண்ணப்பங்களும் என மொத்தம் 800 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதேபோல், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரியில் 845  விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

Advertisement

கடந்தாண்டில் முதல் நாளில் விருதுநகர்-980, ராஜபாளையம்-950 என  விண்ணப்பங்களும் விற்பனையானது. ஆனால், நிகழாண்டில் முதல் நாளில் குறைந்த அளவிலேயே விநியோகம் நடைபெற்றுள்ளதாக பணியாளர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.