ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் 15 பவுன் செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் அவர் அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள மூன்று செயின்களை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியையிடம் 15 பவுன் செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் அவர் அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள மூன்று செயின்களை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் அவர் அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள மூன்று செயின்களை பறித்துச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரசேகர். இவரது மனைவி மகாலட்சுமி (45). இவர் ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் மோட்டார் சைக்கிளில் மகாலட்சுமி பின்னால் அமர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். கார்த்திகைபட்டி விலக்கு அருகே இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இவர்களது வாகனத்திற்கு வலது பக்கமாக வந்து மகாலட்சுமி அணிந்திருந்த தலா 5 பவுன் எடையுள்ள 3 செயின்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இரு இளைஞர்களும் அருகில் இருந்த கிராமச் சாலை வழியே தப்பி ஓடியுள்ளார்கள். இவர்களை சுந்தரசேகர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க இயலவில்லை.
இது குறித்து மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களைத் தேடி வருகிறார்கள்.