முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் கல்வி நிறுவனத்தின் வேலை வாய்ப்பு தொழிற் பயிற்சிகள்

விருதுநகர் மாவட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படிக்காத மற்றும் படிப்பைத் தொடர இயலாத மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படிக்காத மற்றும் படிப்பைத் தொடர இயலாத மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற் பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வயது வந்தோர் கல்வித் துறை சார்பில், சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி மடம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனத்தில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவுள்ளது.இதில் பெண்களுக்கு நர்ஸிங் அசிஸ்டண்ட் (உதவி செவிலியர்), தையல்கலை, அழகுகலை, மென் பொம்மைகள் தயாரித்தல், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், ஆரி மற்றும் சர்தோஷி வேலைப்பாடுகள், சேலையில் பிரிண்டிங் செய்தல், உல்லன் வேலைப்பாடுகள், மெஷின் மற்றும் கை எம்பிராய்டரி, சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும், ஆண்களுக்கு எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், பிளம்பிங் இன்வெர்ட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படவுள்ள இத் தொழிற்பயிற்சிகள் அனைத்தும் பயனாளிகள் சார்ந்துள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பகுதி நேரமாக தினமும் 2 மணி நேரம் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட படித்த மற்றும் படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் இப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இயக்குநர், மக்கள் கல்வி நிறுவனம், 4/92-A, அழகுதேவன்குளம் ரோடு, ஆவாரம்பட்டி, ராஜபாளையம் என்ற முகவரிக்கு இம் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நேரத்தில் 04563-232213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →