சிதம்பரம் ஸ்ரீகூத்தாண்டவர் கோயில் 115-வது ஆண்டு தேரோட்டம்! திரளான மக்கள் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவேட்குளம் பகுதியில் ஸ்ரீகூத்தாண்டவர் கோயில் 115-ம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள்
சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவேட்குளம் பகுதியில் ஸ்ரீகூத்தாண்டவர் கோயில் 115-ம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேர் கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டு, அங்குள்ள சிவன்கோயில் நான்குவீதிகள் வலம் வந்து மீண்டும் கோயில் வளாகத்தை சென்றடைந்தது. பின்னர் அரவாணை காளி பலிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும், காளிஆட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தலைமையில் அப்பகுதி மக்களும், இளைஞர் நற்பணி மன்றத்தினரும் செய்திருந்தனர்.