முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி
தற்போதைய செய்திகள்முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் புதன்கிழமை கொண்டாடினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் இந்த வெற்றியைக் கொண்டாடினர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஜீவாதாரப் பிரச்னையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிலாத தொடர் முயற்சி மேற்கொண்டு தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டியுள்ளார் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுச் செயலாளர் அ.மங்களசாமி, அரசு வழக்குரைஞர் எம்.ஜெகதீசன், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணி, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் பட்டி சீனி, நகர்மன்ற உறுப்பினர் டி.வி.கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.