ஆபாச பட விவகாரம்: அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உடை மாற்றும் விடியோ வெளியான விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ய
தற்போதைய செய்திகள்ஆபாச பட விவகாரம்: அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உடை மாற்றும் விடியோ வெளியான விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ய
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உடை மாற்றும் விடியோ வெளியான விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குகை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தான் உறவினர் வீட்டில் உடை மாற்றியதை விடியோவில் பதிவு செய்து வைத்திருந்த தனது உறவினர் தேவி, அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சியின் 30-வது வார்டு கவுன்சிலர் ஆதிமாதவனிடம் அதைக் கொடுத்திருப்பதாகவும், அந்த விடியோவை வைத்து ஆதிமாதவன் பணம் கேட்டும், ஆசைக்கு இணங்கவும் மிரட்டி வருவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் புகார் அளித்த ஆசிரியையிடம் மற்றொரு புகாரைப் பெற்ற செவ்வாய்ப்பேட்டை போலீஸôர், அதன் பேரில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து கல்லூரி மாணவர்கள் அரசு தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் சேலம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த ஆசிரியை, நீதிபதி (பொறுப்பு) அம்பிகா முன்பு ஆஜராகி வியாழக்கிழமை வாக்கு மூலம் அளித்தார். அதில், அதிமுக கவுன்சிலருக்கு எதிராக புகார் அளித்த என்னை செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் கண்ணன், தன்னை மிரட்டி, வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத இருவர் மீது புகார் கொடுக்கும்படி மிரட்டினார்.
அந்த மனுவைப் பெற்று வேறு இருவரை அவர் கைது செய்துள்ளார். ஆதிமாதவன் மீது நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து கவுன்சிலர் ஆதிமாதவன் மீது வழக்குப் பதிவு செய்யும்படி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 156 (3)-ன் கீழ் செவ்வாய்ப்பேட்டை காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.