குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது: நெல்லை அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது
கணிசமாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் அணைகளின் நீர்இருப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம்
கணிசமாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் அணைகளின் நீர்இருப்பு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. 3 தினங்களில் பாபநாசம் அணையில் 375 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 119 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 338.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து 32.25 அடியாக இருந்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 தினங்களில் 18 அடி உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 50.00 அடியாக இருந்தது. இதேபோல் நீர்மட்டம் 22 அடி உயர்ந்து சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.09 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 5.30 அடி உயர்ந்து 66.65 அடியாக இருந்தது.
இதேபோல், கடனாநதி அணையின் நீர்மட்டம் 34 அடி உயர்ந்து 59.90 அடியாகவும், ராமநதி அணையின் 40 அடி உயர்ந்து 65 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 22 அடி உயர்ந்து 47.25 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 19 அடி உயர்ந்து 46.00 அடியாகவும் இருந்தது.வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1669.49 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1210 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 21 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 118.88 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 63 கனஅடியும், வடக்குபச்சையாறு அணைக்கு விநாடிக்கு 161 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 61 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 47 அடியாகவும் குறைந்தது. பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்த காரணத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுபாடு எழுந்தது. 3 தினங்கள் பெய்த பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.