முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மே.11-ல் உமாபதிசிவம் திருநட்சத்திர குருபூஜை விழா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசன திருவிழாவிற்காக முதல்நாள் கொடியேற்றுவது வழக்கம். கிபி 1310-ல் ஒருமுறை மார்கழி திருவிழாவின் போது கொடியேற்றம் அன்று தில்லைவாழ் அந்தனரான உமாபதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

சிதம்பரம் கொற்றவன்குடிதோப்பில் அமைந்துள்ள மடலாயத்தில் உமாபதிசிவாச்சாரியார் சுவாமிகளின் திருநட்சத்திர குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தரிசன திருவிழாவிற்காக முதல்நாள் கொடியேற்றுவது வழக்கம். கிபி 1310-ல் ஒருமுறை மார்கழி திருவிழாவின் போது கொடியேற்றம் அன்று தில்லைவாழ் அந்தனரான உமாபதி சிவாச்சாரியார் தனது குருவான மறைஞான சம்பந்தரின் சேடப்பிரசாதத்தை ஏற்றுக் கொண்டதால் அவரை திருக்கோயில் முறையிலிருந்து நீக்கிவிட்டனர்.

இதனால் தீட்சிதர்கள் வேறு ஒருவரை கொண்டு கொடியேற்ற முற்பட்டனர். ஆனால் கொடி ஏறவில்லை. அப்போது "யாம் இங்கில்லை, உமாபதி பூசை பெட்டகத்தில் இருக்கின்றோம்" என அசரிரீ கேட்டது. உடனே அனைவரும் கொற்றவன்குடி உமாபதிசிவம் மடத்திற்கு சென்று அவரிடம் நடந்தவற்றை கூறி உமாபதிசிவத்தை பூசை பெட்டகத்துடன் பல்லக்கில் அழைத்து வந்து கோயிலில் எழுந்தருளியனர். அங்கு உமாபதிசிவம் நடராஜப் பெருமானை வழிபட்டு கொடிமரத்தின் அருகே நின்று கொடிகவி பாடியபோது கொடி தானாக ஏறியதாக வரலாறு கூறுகிறது.

இச்சிறப்புவாய்ந்த உமாபதிசிவாச்சாரியாரின் திருநட்சத்திர குருபூஜை விழா (மே.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொற்றவன்குடி தோப்பு உமாபதிசிவம் மடாலயத்தில் உமாபதி சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு திருமுறை விண்ணப்பம், திருமுறை முற்றோதல், மகாபிஷேகம், மகா தீபாராதனை, மகேஸ்வரபூஜை ஆகியவை நடைபெறுகிறது. திரளான சிவனடியார் பங்கேற்று திருமுற்றோதல் செய்யவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.