திருநெல்வேலி அருகே சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியின் கணவர் கொலை
மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த நடராஜன் மகன் பொன்னுச்சாமி (45). அரசு பஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயராணி. இவர், சேதுராயன்புதூர் ஊராட்சித்
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியின் கணவர் வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த நடராஜன் மகன் பொன்னுச்சாமி (45). அரசு பஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயராணி. இவர், சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியாக உள்ளார். இத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொன்னுச்சாமி்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் கடந்த 2013-ம் ஆண்டில் ராமச்சந்திரன் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பொன்னுச்சாமி, ஜெயராணி உள்ளிடோட்டோர் மீது மானூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ் வழக்கில் பொன்னுச்சாமி கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து அரசுப் பணியில் இருந்து தாற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள நூலகத்தில் அமர்ந்திருந்த பொன்னுச்சாமியை, மர்மகும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாம். பலத்த காயமடைந்த பொன்னுச்சாமியை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பொன்னுச்சாமி இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சேதுராயன்புதூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.