முகப்பு
தற்போதைய செய்திகள்

பின்தங்கிய நிலையில் இருந்த சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

கடலூர் மாவட்டத்திலேயே சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்திலேயே தேர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த சிதம்பரம் நந்தனார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு 93 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

கடலூர் மாவட்டத்திலேயே சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருந்தது. குறிப்பாக இப்பள்ளியில் ஏழை, எளிய ஆதிதிராவிடர்  மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2012-13 ஆண்டில் இப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் 70 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு 93 சதவீத தேர்ச்சி பெற்று இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 295 மாணவியர்களில், 275 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.சரளா என்ற மாணவி 1060 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.அனந்தகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

இதேபோன்று நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்டூ தேர்வில் கடந்த 2012-13 ஆண்டு 32 சதவீத தேர்ச்சி பெற்று மிகவும் பின்தங்கியிருந்தது. இந்த கல்வி ஆண்டில் 66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதி 275 மாணவர்களில் 181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் எஸ்.ரஞ்சித் 965 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.