விருதுநகர் மாவட்ட அளவில் பிளஸ்டூ தேர்வில் முதல், மூன்று இடங்களை பெற்று பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியிடப்பட்டது. அதை மாணவ, மாணவிகள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் படித்த பள்ளிகளுக்கு சென்று தகவல் பலகையில் வெளியிடப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். இதில், விருதுநகர் மாவட்ட அளவில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் விவரம் வருமாறு:
ராஜபாளையம் பி.எ.சி.எம். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ். ஞானசெல்வராஜ், 1200-1187 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி 1186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடமும், விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஜி.மோகனபிரியா, சிவகாசி லயன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான சத்தியபிரியா, தீபபிரியா ஆகியோர் 1200-க்கு 1184 பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் குறிப்பிட்ட பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளவர்களின் விவரமாவது. புவியியல் பாடத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜகாளீஸ்வரி மாநில அளவில் 2-வது இடமும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி மாணவிகளான முருகலிங்கேஸ்வரி, சௌமியா ஆகியோர் மாநில அளவில் 3-வது இடமும் பெற்றுள்ளனர்.
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுகன்யா ஆடை தயாரித்தலும், வடிவமைத்தலும் பாடத்தில் மாநில அளவில் 2-வது இடமும், சிவகாசி எஸ்.எச்.என் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா, டெக்ஸ்டைல்ஸ் பாடத்தில் மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். எனவே மாவட்ட அளவிலும், குறிப்பிட்ட பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளையும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி வி.ஜெயக்குமார் உள்ளி்ட்டோர் பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.