சிதம்பரம் அருகே சோடா பாட்டிலால் தாக்கியதில் இருவர் காயம்: ஜாதிய வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு
சிதம்பரம் அருகே மளிகை கடையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட இருவர் சாதி பெயரைச் சொல்லி, சோடா பாட்டிலால் தாக்கிப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் எஸ்சி., எஸ்டி
சிதம்பரம் அருகே மளிகை கடையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட இருவர் சாதி பெயரைச் சொல்லி, சோடா பாட்டிலால் தாக்கிப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே நடராஜபுரத்தில் சிவனேசன் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று திருவாசலடி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் மற்றும் அடையாளம் தெரிந்த நபர்கள் கடைக்கு சென்று கடையிலிருந்த சிவனேசன் மனைவி புஷ்பவள்ளியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சுதாகர் (23), சுந்தரராஜன் ஆகியோர் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குபேந்திரன் உள்ளிட்டோர் கடையிலிருந்த சோடா பாட்டிலை எடுத்து இருவரையும் ஜாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் இருவரும் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுதாகர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் குபேந்திரன் உள்ளிட்ட அடையாளர் தெரிந்த நபர்கள் மீது கொலை மிரட்டல், ஜாதி பெயரை செல்லி இழிவாக திட்டியதால் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.