முகப்பு
தற்போதைய செய்திகள்

அன்னையர்தினம்: அன்னையர்களுக்கு பாதபூஜை!

சிதம்பரம் ஆர்.கே.ஜி பவுண்டே|ன் சார்பில் கீழரதவீயில் உள்ள வின்சாஃப்ட் கணினி பயிற்சி மையத்தில் அன்னையருக்கு சிறப்பு செய்யும் விதமாக அன்னையர் தின விழா கடந்த மே.2-ம் தேதி ஓவியப்போட்டியுடன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

சிதம்பரத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர்களுக்கு பாதபூஜை நடத்தப்பட்டது.

சிதம்பரம் ஆர்.கே.ஜி பவுண்டே|ன் சார்பில் கீழரதவீயில் உள்ள வின்சாஃப்ட் கணினி பயிற்சி மையத்தில் அன்னையருக்கு சிறப்பு செய்யும் விதமாக அன்னையர் தின விழா கடந்த மே.2-ம் தேதி ஓவியப்போட்டியுடன் தொடங்கி 10 தினங்கள் நடைபெற்றது. மே.3-ம் தேதி தாயின் பாதங்களில் சொர்க்கம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியும், 4-ம் தேதி அம்மா என்றால் அன்பு என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், 5-ம் தேதி மியுசிக்கல் சேர் போட்டியும், 6-ம் தேதி வார்த்தை விளையாட்டு போட்டியும், 7-ம் தேதி பாட்டு போட்டியும், 8-ம் தேதி வினாடி-வினா போட்டியும், 9-ம் தேதி தாயில்லாமல் நானில்லை என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், 10-ம் தேதி திருக்குறல் போட்டியும் நடைபெற்றன.

அன்னையர் தினமான மே 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் அன்னையர்தின விழா நடைபெற்றது. விழாவில் அன்னையர்களுக்கு, அவர்களது குழந்தைகள் பாதபூஜை செய்து வணங்கினர். பின்னர் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். ஆர்.கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் கோ.நிர்மலா வரவேற்றார். பொருளாளர் கே.கெளரி முன்னிலை வகித்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் வி.முத்துக்குமரன் வாழ்த்துரையாற்றினார். வி.கே.கோமதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.