முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு

தூத்துக்குடி முத்தையாபுரம் ஐய்யப்பன்கோயில்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிச்செல்வம் (14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே சனிக்கிழமை தனது

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் ஐய்யப்பன்கோயில்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரிச்செல்வம் (14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே சனிக்கிழமை தனது நண்பர்களுடன் மாரிச்செல்வம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, திடீரென அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதிக்குச் சென்றுவிட்டதாம். இதையெடுத்து, மாரிச்செல்வம் கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மாரிச்செல்வத்தின் உடல் உரசியதாகக் கூறப்படுகிறது.இதில், மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மாரிச்செல்வம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.