அண்ணாமலைப் பல்கலையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும்: பாஜக கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013 சட்டதிருத்தம் செய்து தமிழகஅரசு கட்டுப்பாட்டன் கீழ் கொண்ட வரப்பட்டது. அரசு சட்ட கோட்பாட்டின்படி மாணவர் சேர்க்கை கடைபிடிக்க வேண்டும். எனவே மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயித்துள்ளது சட்டத்திற்கு புறம்பானது. அன்றைய தனியார் நிர்வாகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப்புலத்தை தனியார் என்று சொல்லி இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சுயநிதி கல்லூரியாக அனுமதி பெற்று நடத்தி வந்தனர்.
இன்று தமிழகஅரசு அரசுடைமையாக்கிய பிறகு, எப்படி சுயநிதி கல்லூரியாக செயல்பட முடியும். எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தமிழகஅரசு கட்டண கொள்கையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என வே.ராஜரத்தினம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisement