முகப்பு
தற்போதைய செய்திகள்

வெற்றியைக் கொண்டாட ஏற்காடு சென்ற பிளஸ்-2 மாணவர் விபத்தில் சாவு

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஏற்காட்டுக்கு நண்பர்களுடன் சென்ற மாணவன், செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக

தற்போதைய செய்திகள்

வெற்றியைக் கொண்டாட ஏற்காடு சென்ற பிளஸ்-2 மாணவர் விபத்தில் சாவு

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஏற்காட்டுக்கு நண்பர்களுடன் சென்ற மாணவன், செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஏற்காட்டுக்கு நண்பர்களுடன் சென்ற மாணவன், செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஈரோடு மாநகரம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் தேவராஜ் (18). பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்த தேவராஜ், அதில் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக தேவராஜ் தனது நண்பர்களுடன் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.

 இதையடுத்து அவரது நண்பர்கள் பூபதி (21), அஜீத் (18), தருமன் (17) ஆகியோருடன் இரு பைக்குகளில் தேவராஜ் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டார். நால்வரும் சேலம் கந்தம்பட்டி புறவழிச் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

 அப்போது தேவராஜ் - பூபதி வந்த பைக்கின் பின்புறம் ஒரு வேன் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வேனின் பின்புற சக்கரம் தேவராஜ் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 பலத்த காயம் அடைந்த பூபதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →