மயிலாடுதுறை தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம்
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தபால் வாக்குகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பதிவாகியிருந்த 2,637 தபால் வாக்குகளில், சுமார் 400-க்கும் மேற்பட்ட வாக்குகளில், வாக்குப் பதிவு தபாலின் மேல் உறைகளில் வாக்காளரின் கையொப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
கையொப்பம் இல்லாத வாக்குகளை நிராகரிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகளும், அந்த வாக்குகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என சில அரசியல் கட்சிகளும் கருத்துத் தெரிவித்தன. இதனால், தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படவில்லை.