கிருஷ்ணசாமி தோல்வி: அ.தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்: புதிய தமிழகம் பிரமுகர்கள் மீது வழக்கு
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்முறையில் ஈடுபட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மண்டையை சோடா பாட்டிலால் தாக்க
தற்போதைய செய்திகள்கிருஷ்ணசாமி தோல்வி: அ.தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்: புதிய தமிழகம் பிரமுகர்கள் மீது வழக்கு
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்முறையில் ஈடுபட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மண்டையை சோடா பாட்டிலால் தாக்க
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்முறையில் ஈடுபட்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மண்டையை சோடா பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய இரு புதிய தமிழகம் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வீ.கோபால்சாமி (49). இவர் வ.புதுப்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலராகவும், கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.இங்குள்ள டீக்கடையில் தேர்தல் நிலவரம் குறித்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் கிளைச் செயலாளர் பொன்ராஜ் மகன் டென்சிங், சகாயம் மகன் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து கோபால்சாமியிடம் தகராறு செய்துள்ளார்கள். மேலும் கடையில் இருந்த சோடா பாட்டிலால் அவரது தலையில் அடித்து காயப்படுத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த கோபால்சாமி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து டென்சிங் மற்றும் சுரேஷைத் தேடி வருகிறார்கள்.