முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகருக்கு வருகை தந்த தேவாரப்பாடல் பெற்ற திருத்தல பாத யாத்திரை குழு

ராமேஸ்வரத்தில் புறப்பட்ட தேவாரப்பாடல் பெற்ற திருத்தலப் பாத யாத்திரைக் குழு சிதம்பரம் நகருக்கு சனிக்கிழமை வருகை தந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

ராமேஸ்வரத்தில் புறப்பட்ட தேவாரப்பாடல் பெற்ற திருத்தலப் பாத யாத்திரைக் குழு சிதம்பரம் நகருக்கு சனிக்கிழமை வருகை தந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புறப்பட்ட இந்தக் குழுவினர் சுமார் 276 தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று ஜூன் 30-தேதி திருக்காளத்தியில் சென்றடைகின்றனர். வா.சொ.சேது தலைமையிலான பாத யாத்திரைக் குழுவினர் சனிக்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இக்குழுவில் குழு துணைத் தலைவர் வி.வெள்ளைச்சாமி, செயலாளர் சி.ராகவேந்திரன் உள்ளிட்ட 15 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அக்குழுவினரை சிதம்பரம் தெற்கு சன்னதியில் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் யு.கேதார தீட்சிதர் கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

சமூக ஒற்றுமை, சாதி, மதவேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையுடன் வாழ வலியுறுத்தி, மழை வேண்டியும் இந்த பாத யாத்திரையை நடத்துவதாகவும், ஏற்கனவே 2009ம் ஆண்டு இக்குழுவினர் ராமேஸ்வரம்- திருக்களத்தி பாதயாத்திரயை மேற்கொண்டுள்ளளனர். இது பாதாயாத்திரையாகும் என குழுச் செயலாளர் சி.ராகவேந்திரன் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments