முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே முதலை கடித்து  இடதுகாலை இழந்த சிறுவன்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனின் இடதுகாலை முதலை கடித்து தின்றது. இடதுகாலை இழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த 12 வயது சிறுவனின் இடதுகாலை முதலை கடித்து தின்றது. இடதுகாலை இழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றான்.

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது விவசாயி மகன் ஹரீஷ் (12). இவர் வையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவன் ஹரீஷ் செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்களுடன் ஊரில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றிலிருந்த முதலை ஒன்று சிறுவனின் இடதுகாலை பிடித்து கடித்துள்ளது.

சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பாரத்தசாரதி உள்ளிட்டோர் முதலையிடமிருந்து சிறுவனை மீட்டு உடனடியாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலை கடித்ததில் சிறுவனின் இடதுகால் முழங்காலுக்கு கீழ் முழுவதும் துண்டிக்கப்பட்டது. பின்னர் சிறுவன் ஹரீஷ் தீவிர சிகிச்சைக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகி்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.