சிதம்பரத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு
சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 23-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பஸ்நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அனுஷ்டிக்கப்பட்டது.
சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 23-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பஸ்நிலையம் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கே.நாகராஜன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், இளைஞர் காங்கிரஸ் ராஜா சம்பத்குமார், பி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை படிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சச்சிதானந்தம், நிர்வாகிகள் கே.ரஜினிகாந்த், துரை.சிங்காரவேலு, ஆர்.சம்மபந்தமூர்த்தி, இளங்கோவன், ஆர்.எஸ்.ஞானம், கே.எம்.பஷீர், இரும்பு ஆறுமுகம், மகளிரணி நிர்வாகிகள் கோ.ஜனகம், சந்தானமேரி, மீனா, சுப்புலட்சுமி, கட்டாரி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவ.சுரேஷ் நன்றி கூறினார்.